Saturday, December 10, 2011

வரன் தேடும் படலம்..

எப்படி டா பொண்ணு வேணும்னு அம்மா கேட்டாங்க...

வைரமுத்து பாணியில் " மின்னலை பிடித்து தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனம் போல்" என்று சொல்லவா,

இல்ல

தாமரை பாணியில் "அவள் பழகும் விதங்களை பார்க்கையில், பல வருஷ பரிச்சயம் போல இருக்கனும்" என்று சொல்லவா,

இல்ல

நா முத்துக்குமார் பாணியில் "அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பறந்தாலும் , அவள் போல இருக்காது ...அப்படி ஒரு பொண்ணு வேணும் " என்று சொல்லவா

இல்ல


பா விஜய் பாணியில் "இன்று புதிதாக அவிழ்ந்த மலர் போல் " என்று சொல்லவா

.
.
.

ஹ்மம்ம்மம்ம்ம்ம்


எதுவுமே வேணாம்,


"அம்மா உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி, நம்ம வீட்டுக்கு ஒரு மருமகள் இல்ல , மகளை தேடுங்கனு சொன்னேன்"


இத விட ஒரு அம்மாக்கு எப்படி சந்தோசத்த குடுக்க முடியும்...


என் அம்மாவ விட வேற யாரால நல்ல பொண்ண பாக்க முடியும்....:) :)

Sunday, June 27, 2010

உனக்கான என் கவிதை....

எத்தனை மரங்களை அழித்திருப்பார்கள்,
உனக்கான கவிதை எழுத முயன்று,
தோற்றுப் போய் நான் கிழித்த காகிதங்களுக்காக !!
..
..
இயற்கையை காப்பாற்ற ஒப்புக் கொள்கிறேன் நான்,
..
எத்தனை முறை முயன்றும்,
உன்னை விட சிறப்பான ஒரு கவிதையை,
படைக்க முடியவில்லை என்னால்.....!!!

திருமணம்..

எனக்கும் என்னவளுக்கும்,
அம்மி மிதித்து ,
அருந்ததி பார்த்து,
அக்கினி சாட்சியாய் நடந்தால் தான் திருமணமா ??
..
..
எங்களுக்குள் இரண்டாம் திருமணம் பற்றி,
இன்று எதற்கு யோசனை...!!!

Friday, January 8, 2010

காதல்.....

எங்கோ எதிலோ படித்தது.....


முள் இல்லாத ரோஜாவை தூவுங்கள் என் மரண ஊர்வலத்தில்....
வந்தாலும் வருவாள் " என் காதலி ",
பாவம் அவளின் பாதங்கள்......


என் இதயம் துடிக்கிறதோ இல்லையோ...
நன்றாக நடிக்கிறது,
உன்னை மறந்து விட்டேன் என்று....


உடைந்து போன வளையல்,
தவறி விழுந்த கொண்டை ஊசி,
அவள் முகம் துடைத்த கைக்குட்டை,
அறுந்து விழுந்த பாசி மணி,
மை தீர்ந்த பேனா என,
அத்தனையும் இருக்கிறது என்னிடம்,
அவளைத் தவிர.......


ஒரு முறை
உன் வீட்டு ஆளுயர கண்ணாடியில்...
நீ உடை மாற்றும் போது...
நீயே உன்னை பார்...?
பிறகு புரியும் உனக்கும்,
உன் அழகு என்னை எப்படி எல்லாம்
சித்ரவதை செய்கிறது என்று..!


என்றாவது ஒரு நாள்,
நீ என்னை பார்க்க நேர்ந்தால் ,
உன் கணவனிடம் அறிமுகம் செய்,
இவன் தான் என்னால் சாகடிக்கபட்டவன் என்று!!!!!


காதலித்துப் பார் , கவிதை வரும் என்று சொன்னார்கள்,
கண்ணீர் வரும் என்பதை ஏன் எனக்குச் சொல்ல வில்லை,...


இரவு முழுவதும் அழுத என் கண்களுக்கு,
விரல் மட்டுமே ஆறுதல் சொல்ல வந்தது,
மனம் வர வில்லை.....

ஒரு முறை
உன் வீட்டு ஆளுயர கண்ணாடியில்...
நீ உடை மாற்றும் போது...
நீயே உன்னை பார்...?
பிறகு புரியும் உனக்கும்,
உன் அழகுகள் எல்லாம் எப்படி சித்ரவதை
செய்கிறது என்று..!


*********************************************************

*********************************************************
உனக்குக் காதலி கிடைக்கவில்லை என்று கவலைப்படாதே,
அது உன் வருங்கால மனைவியின் வேண்டுதலாகக் கூட இருக்கலாம்.....


*********************************************************

*********************************************************


அடி பெண்ணே,
குப்பைதொட்டி கூட என்னை காதலித்து இருக்கும்
நீ கிழித்துப் போட்ட என் காதல் கடிதங்களை படித்து இருந்தால்...




..................................... கவிஞன்...

கடந்து வந்த பாதை ...

நான் கடந்து வந்த வாழ்க்கை என்ன என்று எண்ணி பார்க்க
விளைந்தேன் ... திரும்பிப் பார்க்கிறேன் இன்று....


ஒரு வயதில், தவழ்ந்து நகர்ந்த காலத்தில்,
ஓடித் திரிந்த எறும்பை,
பிடித்துத் தின்ற ஞாபகம்....


இரண்டு வயதில், தடுக்கி விழுந்து நடந்த நேரத்தில் ,
கையில் கிடைத்த பொருளை,
தூக்கி எறிந்த ஞாபகம்....


ஐந்து வயதில், துள்ளி ஓடிய வயதில்,
எதிர் வீட்டு ஜன்னலை,
உடைத்து விட்ட ஞாபகம்....


ஏழு வயதில், அப்பா மிதிவண்டி ஓட்டி,
தவறி கீழே விழுந்து,
கையை உடைத்துக் கொண்ட ஞாபகம்.....


பத்து வயதில், பள்ளிக்கூட பருவத்தில்,
பக்கத்து வீட்டு கொய்யா மரத்தில் ,
பழம் திருடித் தின்ற ஞாபகம்.....


பன்னிரண்டு வயதில், பள்ளிக்கூட நேரத்தில்,
மேஜையின் மேல் இருந்து கீழே விழுந்து,
மண்டையை உடைந்துக் கொண்டஞாபகம்....


பதினைந்து வயதில், பதின்ம வயதில்,
நண்பர் கூட்டம் சேர்த்து,
முதன்முதலாய் ஊர் சுற்றிய ஞாபகம்......


பதினெட்டு வயதில், கல்லூரிப் பருவத்தில்,
வேகமாய் வாகனம் ஒட்டி,
வித்தைகள் செய்த ஞாபகம்....


இருபது வயதில், ஒரு கூட்டம் சேர்த்து,
நண்பர் வீட்டில் இரவில் ஒன்றாய்,
கூடிக் களிக்த ஞாபகம்....


இருபத்திரண்டு வயதில், கல்லூரி இறுதி நாளில்,
நண்பர் கூட்டம் சேர்ந்து,
ஒன்றாய் எடுத்த புகைப்படம் ஞாபகம்....


இருபத்திமூன்று வயதில், இரவு முழுதும் அலுவலகத்தில்,
என்றும் என் கணிப்பொறியுடன்,
வேலை என்று சொல்லி கழித்த ஞாபகம்...


இன்னும் என் வாழ்கையில் எத்தனை ஞாபகங்கள்...
எண்ணிப் பார்க்கிறேன் அதனை, எத்தனை இனிமை அதனில்,


இன்னும் பல வருடம் வாழ வேண்டும் என்று என்னுள் நினைத்துக் கொள்கிறேன்,
திரும்பிப் பார்க்கும் இந்த இனிமை என்றும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.....


..................பாதை தொடரும்......

Sunday, January 3, 2010

ஞாபகங்கள்....

இந்த வருடப் பிறப்பு மிகுந்த சிரமமான ஒன்றாகவே அமைந்திருக்கின்றது..

என்
கணிபொறியின் நினைவகமும் , என் எண்ணங்களின் பண்பலையும்,
என் அலுவலகம் மற்றும் அது சார்ந்த வேலைகளினால் நிரம்பி வழிகின்றது ...

கணிப்பொறி உலகம் அசாதரணமானது, அழகானது, பணப் புழக்கம் நிறைந்தது, எளிமையானது, சட்டைமடிப்புகூட கலையாத வேலை என்று இந்த உலகத்தில் இன்னும் பல பேர்எண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள்...

அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இங்கிருக்கும் மர்ம வலை....கணிப்பொறி வல்லுநர்ஆகி, பில் கேட்ஸ் எதிரில் அமர்ந்து, பேரம் பேசும் நிலைக்கு வருவோம் என்ற எளிதான கனவுடன் கல்லூரி வாழ்கையில் இருந்துவந்த ஒரு சராசரி பொறியாளன் தான் நானும்....

கணிப்பொறி உலகத்தில் நானும் ஒரு அங்கம் என்ற உற்சாகத்தில் என்னுள் இருந்த பல்வேறுதனித்தன்மைகளை நானும் இழந்து தான் போனேன்... கல்லூரியில் இருந்து கணிப்பொறிநிறுவனத்திற்கு நேராக வந்த ஆர்வத்தில் என்னுடைய உலகம் , என்னுடைய மக்கள், என்னுடன் பழகிய பலரை இழந்ததை நான் அறியத்தான் மறந்தேன்...

இந்த கணிப்பொறி உலகத்தில் நானும் ஒரு மிகப் பெரிய பொறியாளனாய் பரிணாமிக்கவேண்டி, என்னுள் இருந்த பல பரிணாமங்களை இழந்து போனேன்....விண்ணையும்மண்ணையும் எட்டிப் பிடிக்கும் அகசாய சூரனாய் நான் இருந்திருக்கவில்லை...இருப்பினும் எனக்குள்ளும் , எனக்கு மட்டுமே தெரிந்த சில திறன் இருக்க தான் செய்தது...ஒரு சராசரிமனிதர் போல, எனக்குள்ளும் ஒரு கவிஞன் , ஒரு படைப்பாளி, ஒரு குழந்தை, எனக்கேயானஒரு கர்வம் இருக்கத்தான் செய்தது....

ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும், நானும் பணம் சம்பாதித்தேன், மற்றவர் போல நானும் ஒருஉயர் மட்ட வாழ்கையை எட்டிப் பிடிக்கத்தான் செய்தேன்....ஆனால் இது சாதரணமாய்அரங்கேறவில்லை .... கணிப்பொறிக்குள் என் கனவை தொலைக்கக் கிடைத்த கூலி தான்அது...நான் எனக்காக வாழ்ந்த வாழ்க்கையை , பிறர்க்காக இழந்ததற்கு கிடைத்த சன்மானம்தான் அது....

எதற்காக வாழ்கிறோம்.....எதற்காக உழைக்கிறோம் ....எதற்காக பணம் படைக்கிறோம்...இவைஎதற்கும் என்னிடம் விடை இருந்ததில்லை.....

எனக்கே உண்டான நண்பர் வட்டத்தை என்னால் அமைத்துக்கொள்ளத்தான்முடிந்தது.....இருப்பினும் என் வட்டத்திற்குள் எப்போதும் என் அலுவலகம், என் வேலைஅமர்ந்து கொண்டு ஆட்டிப்படைத்ததை உணர முடிந்தது..... நண்பர்களோடு செலவிடநினைத்த பல பொழுதுகளை நான் , அலுவல் காரணமாய் இழந்ததை ஒத்துக்கொள்ளத்தான்வேண்டும்.....

இது எனக்கு மட்டும் அரங்கேறியதோ என்று எண்ணி வருத்தப்பட்டுத்தான் போனேன்நானும்... ஆனால் சில நாட்களில், இது இந்த கணினி வலையில் சிக்கிய பல விட்டில்பூச்சிகளின் பொதுவான வாழ்க்கை முறை தான் என்று புரிந்து கொள்ளத்தான் செய்தேன்....


இந்த வாழ்கையை விட்டு வெளியே வர வேண்டும் என்று தினமும் யோசிக்கத்தான்செய்கிறேன் நானும்.....ஆனால் அலுவல் காரணமாய் அது முடியத்தான் இல்லை....!!!!!

இன்றும் வழக்கம் போல ஏன் இந்த வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு தான்இருக்கிறேன்.....
நாளைக்கும் யோசிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அந்த வலைக்குள்விழத்தான் போகிறேன் .....

Friday, January 1, 2010

நான்!! நீ!! நாம்???

நீ எனக்காக செலவு செய்த ஒவ்வொரு நிமிடமும் ,
நீ என்னுடன் பயணித்த ஒவ்வொரு பயணமும்,
நீ எனக்காக பேசிய ஒவ்வொரு வார்த்தையும்,
நீ எனக்காக வாங்கிய ஒவ்வொரு பொருளும்,

நீ எனக்கானவள் என்று என்னுள் உரக்கக் கூறியது.....

ஆனால்,

நீ எனக்காக இன்று பார்த்திருக்கும் பெண் மட்டும்,

......................!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னுள் ஒரு ஊமை உறைந்து போனான்.........!!!!!

Sunday, October 12, 2008

முத்தம்..


என்னவளே,

உன்னை எனக்கு மொத்தமாய்
தராவிட்டாலும் பரவாயில்லை,

ஒரு முத்தமாவது கொடுத்து விடு...
.
.
.
உன் முத்தம் மிகப் பெரிய பொக்கிஷம்,

தொலைத்து விடுவாய் எனில்,

என் உதடுகளில் பத்திரமாய் சேர்த்து வை...
உனக்கு வேண்டும் பொழுது கண்டிப்பாக திருப்பிக் கொடுத்து விடுகிறேன்....
.
.
.
தைரியமாக எனக்கு முத்தம் கொடு,


முத்த மழையில் நனைந்தால் யாருக்கும் ஜுரம் பிடிக்காதாம்....
.
.
.
உன் உதடுகளில் என்ன பக்குவம் வைத்திருக்கிறாய்,


ஒவ்வொரு முறை முத்தமிடும் பொழுதும்
சுவை கூடிக் கொண்டே போகிறதே....
.
.
.
ஒவ்வொரு முறை முத்தமிடும் பொழுதும்,
மனிதனுக்கு ஆயுள் 10 நிமிடம் கூடுமாம்!!!

அன்பே, வா நாம் இருவரும் சாகா வரம் பெறுவோம்....
.
.
.
வருடத்திற்கு ஒரு முறை தான் சொர்க்க வாசல் திறக்குமாம்,

யார் சொன்னது,

உன் இதழ்கள் ஒன்று சேர்ந்து என்னை
முத்தமிட்டு பின் திறக்கும் ஒவ்வொரு முறையும்,
எனக்கு சொர்க்க வாசல் திறப்பு தான்....
.
.
.
உலகத்திலேயே மிக பயங்கரமான ஆயுதம் அணுகுண்டு தானாம்...
உன் இதழ்கள் பற்றி இன்னும் யாருக்கும் தெரியவில்லை போலும்...
.
.
.
இப்படிக்கு,

இதயத்தில் ஆரம்பித்து இதழ்களில் முடியும் முத்ததிற்காக காத்திருக்கும் ஒருவன்......


காதல் கைப்பேசிகள்....

நாங்கள் இருவரும் இதுவரை ஒரு முறை கூட
பேசிக் கொண்டதில்லை....

எங்கள் கைப்பேசிகள் இரண்டும் தான் எப்பொழுதும்
காதல் செய்து கொண்டு இருக்கின்றன....

Wednesday, October 8, 2008

காதல் பரிசு...

என்னுடைய கல்லூரி இரண்டாம் ஆண்டில் நான் எழுதிய கவிதை இது...முழுமையான கவிதை நினைவில் இல்லை.....சிதறிய பாகங்களின் தொகுப்பு இதோ.......


எளிதான பாடத்திலா தோல்வி அடைந்தாய்
என என்னை பார்த்து ஏளனம் செய்கிறாயே,

நீ என்னிடம் வந்து பேசும் இந்த வார்த்தைகளுகாகத்தான்
நான் தோல்வி அடைந்தேன், என்று எப்படி உன்னிடம் கூறுவது....
.
.
.
இந்த சாதாரண கணக்கு கூட புரியவில்லையா என்று
தலையில் செல்லமாய் குட்டினாயே,

உன் கைகள் என் மேல் படுவதற்காகத்தான்
நான் புரியாமல் நடிக்கிறேன், என்று எப்படி உனக்கு புரிய வைப்பது...
.
.
.
பொது அறிவுப் போட்டியில், உனக்கு முன் நான் தான் விடை அளித்தேன்
என்று பெருமிதம் பொங்க சிரிக்கிறாயே,

இந்த சிரிப்புக்காகத்தான் நான் விடை தெரிந்தும்
சொல்லாமல் இருந்தேன், என்று எப்படி உன்னிடம் சொல்லுவது.....
.
.
.
.
.
.
.

இப்படி,
நீ வெல்வதற்காகவே , நான் தோற்கிறேன்....
நீ சிரிப்பதற்காகவே, நான் மௌனம் ஆகிறேன்....

இருந்தும்,
என்னை விட்டு ஏன் இன்று பிரிந்து செல்கிறாய்....

இதுதான்,
எவரிடமும் தோற்காத நான்,
உன்னிடம் தோற்றதற்கு நீ தரும் முதல் பரிசோ....




..........................................................................................................ஒரு கவிஞன்.

Friday, September 26, 2008

நம்ம பசங்க....

வன் கூட சேராதேன்னு அம்மா சொல்லி கேட்டதில்லை....
உருப்படாத பசங்கன்னு வாத்தியார் சொன்னத மதிச்சதில்லை...
டீ கடையில வச்ச கணக்க என்னைக்கும் அடைச்தில்லை...
கிளாஸ்ல நாம பாடம் என்னைக்கும் கவனிச்சதில்லை....

ப்பு வச்ச அண்ணா யுனிவர்சிட்டி பத்தி,
நாம அணுவளவும் நினைச்சதில்லை .....
பரீட்சை வருதேன்னு நாம, பயந்து போய் படிச்சதில்லை.....

து உன் பிகரு , இது என் பிகருன்னு,
சண்டை எதுவும் வந்ததில்லை.....
இன்னைக்கு உன் பிகரு, நாளைக்கு எனக்குன்னு , சமரசமா போயிருவோமே...

, காக்கா வராத காட்டுக்குள்ள, நம்ம காலேஜ் இருந்திருந்தும்,
இன்ஜினியரிங் படிக்கிறோம்ன்னு, எவ்வளவு கூத்து அடிச்சுருப்போம்....
காயின் பாக்ஸ்ல காசு போட்டே, நம்ம அப்பா சொத்த அழிச்சோமே....
கடலை போட்டு, கடலை போட்டே, எல்லாத்தையும் தொலைச்சோமே...

யிரை குடுத்து பாடம் எடுத்த நம்ம டீச்சர பாத்து ,
" யாரு பெத்த புள்ளையோ, இப்படி தனியா புலம்புதேன்னு ",
ஜாலியா கூத்தடிச்ச நாட்களை எப்படிடா மறக்க முடியும்...

ரு சுத்த ஆசை இருக்கும்........ ஆனா,,,,
பாக்கெட் உள்ளுக்குள்ள காசு இருந்ததில்லை.....
காசு இல்லாட்டியும் நண்பா, நாம கவலை என்னைக்கும் பட்டதில்லை....
கேலியும், கிண்டலும் என்னைக்கும் கொறைஞ்சதில்லை...

ல்லாரும் மாமனுங்க...எல்லாரும் மச்சானுங்க...
பேரு என்னன்னு கேட்டதில்லை......
யாருன்னே தெரியாட்டியும், இவன் நம்ம பையன்னு சொல்லி,
தோளில் நாம கை போட்டு, ஒண்ணாவே இருந்தோமே....

ப்பம் விட்டு தின்ன கான்டீன் சோத்த, எப்படிடா மறக்க முடியும்...
சுண்ணாம்பு கலந்த சோறுன்னு தெரிஞ்சிருந்தும் ,
சூப்பரா இருக்குன்னு சொல்லி, மூணு ரவுண்டு தின்னோமே...
மூச்சு முட்ட தின்னுட்டு, ஒரு முழு தூக்கம் போட்டுட்டு,
காலேஜ் முடியறதுக்கு முன்னாடி, நாம கிளாஸ்ல இருந்து கிளம்புவோமே...

யர் வீட்டு அஹ்ரகாரம் நம்ம ஊர்ல இல்லைன்னு,
கோவில் கோவிலா சுத்தி நாம சேர்த்த புண்ணியத்த!!!!????!!!!!,
நினைச்சாலே நெஞ்சுக்குள்ள குதூகலம் சேர்ந்திடுமே......

ரு நாளு உன் வீட்ல, ஒரு நாளு என் வீட்லன்னு ,
நைட்டெல்லாம் செஞ்ச அலும்பு, மூளைக்குள்ள சுத்துதடா.....
இது வாலிப வயசுன்னு, வடிவேலு மாதிரி திரிஞ்சுகிட்டு ,
நாம செஞ்ச வேலையெல்லாம், நட்டு வச்ச மரம் போல, நல்லாவே நிக்குதுடா. ....

சியில தம்மு அடிச்சாலும், நம்ம தலைவர் மாதிரி,
ரவுண்டு ரவுண்டா புகை விட்டது, என்னைக்கும் மறக்காது,
இனி நினைச்சாலும் திரும்பாது....

வையார் சொன்ன ஆத்திசூடி, என்னனு நினைவில்லை ,
ஆனா நாம கூடி அடிச்ச கும்மாளமெல்லாம் பசுமரத்தாணி போல பதிஞ்சுருக்கு...
என்னைக்காவது இந்த நாட்கள், அப்படியே திரும்பும் என்று,
யாரவது கண்டுபிடித்தால், நிச்சயம் எனக்கு சொல்லுங்கள் ......

மறுபடியும் அந்த நாட்கள், வரும் என்ற நம்பிக்கையில்,
இன்னும் பல ஜீவன்கள், இவ்வுலகில் இருக்கிறார்கள்.....
வாழ்க்கை என்ற சக்கரத்தில் சுத்தி சுத்தி வருகிறார்கள்.....

..........................................................................................................காத்திருக்கும் ஒரு ஜீவன்......




Thursday, September 25, 2008

என்னவள் கண்கள்....


செய்தித்தாளின் முதல் பக்கத்தில் கண்டேன்......
ஒரு மின்னலின் ஒளியில் இருந்து ஊருக்கே மின்சாரம் தயாரிக்க முடியுமாம்......

அசந்து விட்டேன் நான்......

என்னவளே நீ நேற்று பார்த்த பார்வையில் இந்த உலகுக்கே மின்சாரம் கிடைக்குமே என்று......

என்னவள் சிரிப்பு....




எங்கிருந்து திடீரென்று இத்தனை பட்டாம்பூச்சிகள் வந்தது என்று வியந்து கொண்டிருகிறார்கள் என் நண்பர்கள்....


பாவம் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை , என்னவள் சிரிக்கிறாள் என்று.....


கதிரியக்கம் Vs கண்ணியக்கம்


கதிரியக்கத்தின் விளைவுகள் மிகப் பெரியது என்று
விளக்கிக் கொண்டிருந்தார் என் ஆசிரியர்....

வியப்பில் இருக்கிறேன் நான்..
இன்னும் இந்த உலகத்திற்கு உன் கண் இயக்கத்தின் விளைவுகள் தெரியாதா என்று....

Wednesday, September 24, 2008

அவள் இல்லாத உலகம்

அவள் இல்லாத உலகம் ...

இருண்டு போய் இருக்கிறது இந்த blog போல ,

அவள் இல்லாத உலகம் ...

காலை உதிக்கிறது வெளிச்சம் இல்லாமல் ...

அவள் இல்லாத உலகம் ...

காலண்டர் கிழிகிறது நாட்கள் நகராமல்.....

அவள் இல்லாத உலகம் ...

கடிகார முட்கள் ஊர்ந்து செல்கிறது, உயிரோட்டம் இல்லாமல்....

அவள் இல்லாத உலகம் ...

மனிதர்களும் மண்ணுக்கு சமமாய் தெரிகிறார்கள்.....

ஆயிரம் வசதிகள் இருந்தும் , அவள் இல்லாமல் ,
புவியில் ஆயிரம் வசதிகள் இருந்தும், அவள் இல்லாமல்,
பூலோகமே புல் பூண்டு போல் தெரிகிறது......
மற்றவர் புன்னகை கூட புண்ணாக தெரிகிறது.....

அவள் இல்லாத உலகம்.....

மாற்றங்கள் நடக்கும் என்று நம்புகிறது மனது...
நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று நம்புகிறது என் மனது...
எல்லாம் அவள் செய்த புண்ணியத்தால் நல்லதாக நடக்கும் என்று நம்புகிறது மனது...

அவள் இல்லாத உலகம்.....

இப்படிக்கு....
................................................................அவள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன்........