Sunday, January 3, 2010

ஞாபகங்கள்....

இந்த வருடப் பிறப்பு மிகுந்த சிரமமான ஒன்றாகவே அமைந்திருக்கின்றது..

என்
கணிபொறியின் நினைவகமும் , என் எண்ணங்களின் பண்பலையும்,
என் அலுவலகம் மற்றும் அது சார்ந்த வேலைகளினால் நிரம்பி வழிகின்றது ...

கணிப்பொறி உலகம் அசாதரணமானது, அழகானது, பணப் புழக்கம் நிறைந்தது, எளிமையானது, சட்டைமடிப்புகூட கலையாத வேலை என்று இந்த உலகத்தில் இன்னும் பல பேர்எண்ணிக்கொண்டு தான் இருக்கிறார்கள்...

அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை இங்கிருக்கும் மர்ம வலை....கணிப்பொறி வல்லுநர்ஆகி, பில் கேட்ஸ் எதிரில் அமர்ந்து, பேரம் பேசும் நிலைக்கு வருவோம் என்ற எளிதான கனவுடன் கல்லூரி வாழ்கையில் இருந்துவந்த ஒரு சராசரி பொறியாளன் தான் நானும்....

கணிப்பொறி உலகத்தில் நானும் ஒரு அங்கம் என்ற உற்சாகத்தில் என்னுள் இருந்த பல்வேறுதனித்தன்மைகளை நானும் இழந்து தான் போனேன்... கல்லூரியில் இருந்து கணிப்பொறிநிறுவனத்திற்கு நேராக வந்த ஆர்வத்தில் என்னுடைய உலகம் , என்னுடைய மக்கள், என்னுடன் பழகிய பலரை இழந்ததை நான் அறியத்தான் மறந்தேன்...

இந்த கணிப்பொறி உலகத்தில் நானும் ஒரு மிகப் பெரிய பொறியாளனாய் பரிணாமிக்கவேண்டி, என்னுள் இருந்த பல பரிணாமங்களை இழந்து போனேன்....விண்ணையும்மண்ணையும் எட்டிப் பிடிக்கும் அகசாய சூரனாய் நான் இருந்திருக்கவில்லை...இருப்பினும் எனக்குள்ளும் , எனக்கு மட்டுமே தெரிந்த சில திறன் இருக்க தான் செய்தது...ஒரு சராசரிமனிதர் போல, எனக்குள்ளும் ஒரு கவிஞன் , ஒரு படைப்பாளி, ஒரு குழந்தை, எனக்கேயானஒரு கர்வம் இருக்கத்தான் செய்தது....

ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும், நானும் பணம் சம்பாதித்தேன், மற்றவர் போல நானும் ஒருஉயர் மட்ட வாழ்கையை எட்டிப் பிடிக்கத்தான் செய்தேன்....ஆனால் இது சாதரணமாய்அரங்கேறவில்லை .... கணிப்பொறிக்குள் என் கனவை தொலைக்கக் கிடைத்த கூலி தான்அது...நான் எனக்காக வாழ்ந்த வாழ்க்கையை , பிறர்க்காக இழந்ததற்கு கிடைத்த சன்மானம்தான் அது....

எதற்காக வாழ்கிறோம்.....எதற்காக உழைக்கிறோம் ....எதற்காக பணம் படைக்கிறோம்...இவைஎதற்கும் என்னிடம் விடை இருந்ததில்லை.....

எனக்கே உண்டான நண்பர் வட்டத்தை என்னால் அமைத்துக்கொள்ளத்தான்முடிந்தது.....இருப்பினும் என் வட்டத்திற்குள் எப்போதும் என் அலுவலகம், என் வேலைஅமர்ந்து கொண்டு ஆட்டிப்படைத்ததை உணர முடிந்தது..... நண்பர்களோடு செலவிடநினைத்த பல பொழுதுகளை நான் , அலுவல் காரணமாய் இழந்ததை ஒத்துக்கொள்ளத்தான்வேண்டும்.....

இது எனக்கு மட்டும் அரங்கேறியதோ என்று எண்ணி வருத்தப்பட்டுத்தான் போனேன்நானும்... ஆனால் சில நாட்களில், இது இந்த கணினி வலையில் சிக்கிய பல விட்டில்பூச்சிகளின் பொதுவான வாழ்க்கை முறை தான் என்று புரிந்து கொள்ளத்தான் செய்தேன்....


இந்த வாழ்கையை விட்டு வெளியே வர வேண்டும் என்று தினமும் யோசிக்கத்தான்செய்கிறேன் நானும்.....ஆனால் அலுவல் காரணமாய் அது முடியத்தான் இல்லை....!!!!!

இன்றும் வழக்கம் போல ஏன் இந்த வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு தான்இருக்கிறேன்.....
நாளைக்கும் யோசிக்க நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அந்த வலைக்குள்விழத்தான் போகிறேன் .....

4 comments:

மதன்ராஜ் மெய்ஞானம் said...

Nach! Machi...

Thirumalaisamy Thangavel said...

Nice machi..

Gopi Kuppanna (GK) said...

wow.. really good..
கணிப்பொறிக்குள் என் கனவை தொலைக்கக் கிடைத்த கூலி தான்அது

கணினி வலையில் சிக்கிய பல விட்டில்பூச்சிகளின் பொதுவான வாழ்க்கை

மீண்டும் அந்த வலைக்குள்விழத்தான் போகிறேன்

some perfect choice of words..

Unknown said...

the last lines are great..

nice one..