
உருப்படாத பசங்கன்னு வாத்தியார் சொன்னத மதிச்சதில்லை...
டீ கடையில வச்ச கணக்க என்னைக்கும் அடைச்தில்லை...
கிளாஸ்ல நாம பாடம் என்னைக்கும் கவனிச்சதில்லை....
ஆப்பு வச்ச அண்ணா யுனிவர்சிட்டி பத்தி,
நாம அணுவளவும் நினைச்சதில்லை .....
பரீட்சை வருதேன்னு நாம, பயந்து போய் படிச்சதில்லை.....
இது உன் பிகரு , இது என் பிகருன்னு,
சண்டை எதுவும் வந்ததில்லை.....
இன்னைக்கு உன் பிகரு, நாளைக்கு எனக்குன்னு , சமரசமா போயிருவோமே...
ஈ, காக்கா வராத காட்டுக்குள்ள, நம்ம காலேஜ் இருந்திருந்தும்,
இன்ஜினியரிங் படிக்கிறோம்ன்னு, எவ்வளவு கூத்து அடிச்சுருப்போம்....
காயின் பாக்ஸ்ல காசு போட்டே, நம்ம அப்பா சொத்த அழிச்சோமே....
கடலை போட்டு, கடலை போட்டே, எல்லாத்தையும் தொலைச்சோமே...
உயிரை குடுத்து பாடம் எடுத்த நம்ம டீச்சர பாத்து ,
" யாரு பெத்த புள்ளையோ, இப்படி தனியா புலம்புதேன்னு ",
ஜாலியா கூத்தடிச்ச நாட்களை எப்படிடா மறக்க முடியும்...
ஊரு சுத்த ஆசை இருக்கும்........ ஆனா,,,,
பாக்கெட் உள்ளுக்குள்ள காசு இருந்ததில்லை.....
காசு இல்லாட்டியும் நண்பா, நாம கவலை என்னைக்கும் பட்டதில்லை....
கேலியும், கிண்டலும் என்னைக்கும் கொறைஞ்சதில்லை...
எல்லாரும் மாமனுங்க...எல்லாரும் மச்சானுங்க...
பேரு என்னன்னு கேட்டதில்லை......
யாருன்னே தெரியாட்டியும், இவன் நம்ம பையன்னு சொல்லி,
தோளில் நாம கை போட்டு, ஒண்ணாவே இருந்தோமே....
ஏப்பம் விட்டு தின்ன கான்டீன் சோத்த, எப்படிடா மறக்க முடியும்...
சுண்ணாம்பு கலந்த சோறுன்னு தெரிஞ்சிருந்தும் ,
சூப்பரா இருக்குன்னு சொல்லி, மூணு ரவுண்டு தின்னோமே...
மூச்சு முட்ட தின்னுட்டு, ஒரு முழு தூக்கம் போட்டுட்டு,
காலேஜ் முடியறதுக்கு முன்னாடி, நாம கிளாஸ்ல இருந்து கிளம்புவோமே...
ஐயர் வீட்டு அஹ்ரகாரம் நம்ம ஊர்ல இல்லைன்னு,
கோவில் கோவிலா சுத்தி நாம சேர்த்த புண்ணியத்த!!!!????!!!!!,
நினைச்சாலே நெஞ்சுக்குள்ள குதூகலம் சேர்ந்திடுமே......
ஒரு நாளு உன் வீட்ல, ஒரு நாளு என் வீட்லன்னு ,
நைட்டெல்லாம் செஞ்ச அலும்பு, மூளைக்குள்ள சுத்துதடா.....
இது வாலிப வயசுன்னு, வடிவேலு மாதிரி திரிஞ்சுகிட்டு ,
நாம செஞ்ச வேலையெல்லாம், நட்டு வச்ச மரம் போல, நல்லாவே நிக்குதுடா. ....
ஓசியில தம்மு அடிச்சாலும், நம்ம தலைவர் மாதிரி,
ரவுண்டு ரவுண்டா புகை விட்டது, என்னைக்கும் மறக்காது,
இனி நினைச்சாலும் திரும்பாது....
ஔவையார் சொன்ன ஆத்திசூடி, என்னனு நினைவில்லை ,
ஆனா நாம கூடி அடிச்ச கும்மாளமெல்லாம் பசுமரத்தாணி போல பதிஞ்சுருக்கு...
என்னைக்காவது இந்த நாட்கள், அப்படியே திரும்பும் என்று,
யாரவது கண்டுபிடித்தால், நிச்சயம் எனக்கு சொல்லுங்கள் ......
மறுபடியும் அந்த நாட்கள், வரும் என்ற நம்பிக்கையில்,
இன்னும் பல ஜீவன்கள், இவ்வுலகில் இருக்கிறார்கள்.....
வாழ்க்கை என்ற சக்கரத்தில் சுத்தி சுத்தி வருகிறார்கள்.....
..........................................................................................................காத்திருக்கும் ஒரு ஜீவன்......
4 comments:
Kalluri nenappula neendha vittutuye nanba... super
ஆ.. ஆ.. ஆ.. என்னமா பீல் பண்ணி எழுதி இருக்கான்யா?
Yuva...... Supera iruku..
realy superb.. u should try publishing this in some magazines..
Post a Comment